Tamil
Tamil
பட்டிமன்றம் – சொற்போர்
விளக்கம்
- ஆன்றோரும் சான்றோரும் நிறைந்த அவையில் அழகுத்தமிழில் ஆழ்ந்த இலக்கியம் மற்றும் சமூகம் சார்ந்த தலைப்புகளில், இரு பிரிவினரிடையே நடக்கும் இதமான சொற்போரே பட்டிமன்றம்.
- தலைப்பு சார்ந்து வாதிடுதலே பட்டிமன்றத்தின் தலையாய நோக்கம்.
- தலைப்பைச் சார்ந்தும் ஆதரித்தும் தலைப்பின் மையக்கருத்தை மறுதலித்தும் எவ்வித தளர்வுமின்றி தன் தலைப்பு சார்ந்து வாதிடுதலே சிறந்த பட்டிமன்றம்.
- நலம் பயக்கும் நகைச்சுவையும் நளினமான ஏளனமும் கலந்து வாதிடும் சொல்லாடலாகிய பட்டிமன்றம் இருகரம் கூப்பி இனிதே வரவேற்கப்படுகிறது.
தலைப்பு
எதிர்காலம் என்பது?
A-செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்டதா.
B-மனித மாண்பை மேம்படுத்த முன்னேற்றுவதா
C-பூமியின் நலன் சார்ந்தது
விதிகள்
- ஒரு முதன்மை அணிக்கு 1 குழு
- ஒவ்வொரு குழுவிலிருந்தும் நான்கு நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
- ஒவ்வொரு நபருக்கும் மூன்று நிமிடங்கள் மட்டுமே வாதிட அனுமதி வழங்கப்படும்.
- பங்கேற்பாளர்கள் தங்களுக்கு உரிய நேரத்திற்குள் வாதத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.
விவாத மேடை
தலைப்பு
இன்றைய உலகில் வெற்றி என்பது
A-பொருளாதாரம் சமூக அந்தஸ்தும்
B-தனிமனித தன்னிறைவு
C-சமூகத்தின் மீதான தாக்கம்.
விதிகள்
- ஒரு முதன்மை அணிக்கு 1 குழு
- ஒவ்வொரு குழுவிலிருந்தும் 10 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
- பங்கேற்பாளர்கள் தங்களுக்கு உரிய நேரத்திற்குள் வாதத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.
category
date
October 5, 2020